உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்

418

உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச்சேர்ந்த ஓவிய கலைஞரான சர்வேஷ், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரின் மாதிரிகளை தத்ரூபமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கார்ட்போர்ட் அட்டைகள் மற்றும் இரும்புகளை கொண்டு இதனை வடிவமைத்து வருகிறார்.

ஆனால் அவரின் இந்த முயற்சிக்கு பணம் தேவை பட்டதால் இந்த பணிகளை பாதியிலே நிறுத்தி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு சமர்பிக்கும் வகையில் இதை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.