தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

366
Advertisement

தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு AITUC தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க வேண்டும், டெண்டர் முறையை கைவிட்டு ஆண்டு வியாபார கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும், தெரு வியாபாரிகளை சட்ட விரோதமாக அச்சுறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.