“பிரதமர் கூறியதை செய்யவில்லை”

189

மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், எரிவாயு சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியதை செய்யவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இவை தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை என கூறிய அவர், இவற்றை முழுமையாக குறைக்கவேண்டும் என்றார்.