குறைந்தது தக்காளியின் விலை

242

கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை  கடந்து விற்பனையானது.

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

முதல் தர தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை குறைந்துள்ளதால் இல்லதரசிகள் நிம்மதி அடைந்துள்ளன.