இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

345

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவ, தெற்கு கேரளா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.