நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் : பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

neet
Advertisement

நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அவைக் கூடியதுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சில கேள்விகளை முன்வைத்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement