வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

164

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தை சேர்ந்தவர் தவமணி.
கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தாமரைபுஷ்பம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தவமணி வெளியே சென்றிருந்த நிலையில் தாமரைபுஷ்பம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் பின்புற வாசல் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் தாமரைபுஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.

Advertisement

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தாமரைபுஷ்பம் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ்ஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.