தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முழுமையான விசாரணை வேண்டும்

249

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான “முத்துநகர் படுகொலை” ஆவணப்படத்தை படக்குழுவினருடன் சீமான் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்த அவர், கைக்குழந்தையுடன் யாராவது கலவரம் செய்ய வருவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

வாகனத்தின் மீது வசதியாக ஏறி நின்று கொண்டு போராட்டம் நடத்திய மக்களை காவல்துறையினர் சுட்டுத்தள்ளியுள்ளனர் என்றும் சீமான் குற்றம்சாட்டினார், ஸ்டெர்லைட் துப்பாக்கி்ச்சூடு சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.