உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் 2 கோடியே 27 லட்சத்து 96 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
25. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 71 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே-மாதம் 22 ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட 101 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களில் 71 பேர் இன்று மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சண்முகையா முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ விசாரணை அறிக்கையில், காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதனிடையே, சிபிஐ-யின் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,இன்று 71 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது குறி்ப்பிடத்தக்கது.