பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர்

255

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியருக்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.