உலகிலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணம் என்ன?

162
Advertisement

பல்வேறு நிறுவனங்கள் பல விதமான மொடல்களில் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகின்றன.

இவற்றில் பல போன்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது, பல ஈர்ப்பதில்லை.அப்படி எந்த வகையிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்காமல் உலகளவில் மோசமான ஸ்மார்ட்போன் என்ற பெயரை ஒரு போன் பெற்றுள்ளது.இந்த நிறுவனம் பவர் பேங்க்களை விற்பனை செய்வதோடு, ஸ்மார்ட்போன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது.

அவர்கள் அறிமுகப்படுத்திய Energizer Power Max P18K வாடிக்கையாளர்களை சிறிது கூட ஈர்க்கவில்லை.அதன் நீக்க முடியாத Li-Po 18,000 mAh பேட்டரி பலருக்கும் பிடிக்கவில்லை.Energizer P18K ஸ்மார்ட்போன் 30-40 மிமீ தடிமன் கொண்டது, இது ஸ்மார்ட்போனுக்கு மிகவும் அதிகம் ஆகும். குறிப்பாக இன்றைய நுகர்வோர் மெல்லியவற்றையே விரும்புகின்றனர்

P18K விற்பனை விலை USD$599 என திட்டமிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இண்டிகோகோவில் இந்த ஸ்மார்ட்போன் போதுமான ஆதரவைப் பெறவில்லை. இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட தொகுதி தொடர்பான அனைத்து திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனம் தள்ளப்பட்டது.
இறுதியில் இந்த மொடல் செல்போன் சந்தையில் விற்பனை செய்யப்படும் முடிவு கைவிடப்பட்டது.