இது லிஸ்ட்லயே இல்லையே.. பிராமணர்களை குறிவைத்து கேசிஆர் வெளியிட்ட மெகா அறிவிப்பு..

128
Advertisement

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அம்மாநில பிராமண சமுதாய மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர் என்றும் இதனால் பிராமணர் நலத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார்.

தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக முயற்சித்து வருகிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளதால் அந்த கட்சியுடனும் சந்திரசேகர் ராவ்வால் கூட்டணி அமைக்க முடியவில்லை. மறுபக்கம்பாஜகவும் கடுமையான நெருக்கடி தருகிறது. கடந்த சில வருடம் முன்பு ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக, கேசிஆரின் (சந்திரசேகர் ராவ்) கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து பாஜகவை தெலுங்கானாவில் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார் சந்திரசேகர் ராவ். அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுடன் கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு சவால் விடும் வகையில், பல்வேறு விஷயங்களை அங்கு செய்து வருகிறார்.