திருவள்ளுவர் பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் சோதனை

vellore thiruvalluvar university
Advertisement

வேலூர் – திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

2013 முதல் 3 ஆண்டுகள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் அசோகன். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 கோடி சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

பணியாளர் நியமனம் உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்ததாக அசோகன் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் திருவாரூர் அருகே மேல எருக்காட்டூரில் உள்ள அசோகன் வீட்டில் சோதனை நடைபெற்றதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.