தீம் பார்க்கில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

482

திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த பாஸ்கர் – ஸ்டெல்லா தம்பதியினர், கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் திருப்பூர் ஊத்துக்குளியில் உள்ள பொழுது போக்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் மகன் ஸியாம் ராபின்சன் எதிர்பாராத விதமான நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

உடனடியாக நீரில் மூழ்கிய சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.