பதவியை இழக்கும் ஆளுங்கட்சியின் இளம் கவுன்சிலர்.. மேயர் ரேஸில் இருந்தவர் தகுதி இழப்பு.. என்னாச்சு??

36
Advertisement

கோவை மாநகராட்சியின் இளம் பெண் கவுன்சிலர் நிவேதா கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.

மேயர் பதவிக்கான ரேஸில் இருந்த நிவேதா கவுன்சிலர் பதவியை இழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், பதவி இழப்பு செய்யப்படும் விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி 97வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் கவுன்சிலர் நிவேதா ஆவார். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வென்றார் நிவேதா. நிவேதா திமுக கோவை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார்.

நிவேதா தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சுகள் எழுந்தன.

கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 100க்கு 96 இடங்களில் வென்ற நிலையில், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இளம் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி, கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.