பாகிஸ்தானை வம்புக்கு இழுக்கும் தலிபான்கள்

248

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது 2வது தலைநகராக மாற்றுவோம் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தாலிபான் அதிகாரி ஒருவர், ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு 5ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருப்பதாக தெரிவித்த அவர், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் வசம் இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.