தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது……

95
Advertisement

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழக்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தல் நேற்று முன்தினம் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 36 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 492 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 660ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 2 பேர் இறந்துள்ளதாக, தமிழக சுகதாரத்தறை தெரிவித்துள்ளது.