டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து 2 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

113
Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்.

  இவர் திருவலம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் நேற்று பணி முடித்துவிட்டு நேற்றைய கலக்ஷன் பணம் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பது ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது இருக்சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தார்.  அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அசோக்குமாரை தாக்கிவிட்டு வசூல் பணம் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளனர்.  இதுகுறித்து அசோக் குமார் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.