அதிமுக பொதுக்குழு: சூடாக வாதங்களை அடுக்கிய எடப்பாடி தரப்பு.. விசாரணையை மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்!!!

251
Advertisement

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று மீண்டும் சூடாக விசாரணை நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதம் செய்தார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்படி, ஒரு மாத இடைவெளிக்குப் பின் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.