போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது

205

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்று வரும் போராட்டம் 4வது வாரத்தை எட்டிய நிலையில், வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதனை கண்டித்து, ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களில், போராட்டகாரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உணவகத்தில் ஹிஜாப் அணியாமல், உணவு சாப்பிட்ட 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சென்ற17 வயது சிறுமியை ஈரான் பாதுகாப்பு படையினர் கொலை செய்தது ரகசியமாக புதைத்தனர்.

இச்சம்பவங்களால் ஈரானில் போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், போராட்டங்களில் வெடித்த வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.