அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கலமா என்பது குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

82
Advertisement

அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் 10 நாட்களில் முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த அவகாசம் வருகிற 22ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஆனூப் சந்திர பாண்டே, ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கலமா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.