நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற புதிய இணையதள சேவையை இன்று அறிமுகம் செய்ய உள்ளது….

141
Advertisement

இதன் மூலம் செல்போன் நாடு முழுவதும் எங்கு தொலைந்தாலும் அல்லது திருடப்பட்டு இருந்தாலும், செல்போன் IMEI எண்ணை பயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருடு போன செல்போன்களின் செயல்பாட்டை எளிதாக முடக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திவதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்போன்களின் IMEI எண்களையும் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனங்கள், மத்திய அரசிடம் தெரிவிக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்காணிப்பு CEIR அமைப்பை திறன்பட இயக்க உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.