மோடி மீது அமித் ஷாவுக்கு கோபமா? கொளுத்திப் போட்ட ஸ்டாலின்……

196
Advertisement

அமித் ஷா சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பேசியவற்றை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல்பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததைச் சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் , சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் உள்ள கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.

வைத்திலிங்கத்துக்கு கை கொடுக்கும் டிடிவி தினகரன்: எடப்பாடியை வீழ்த்த பிளான்!

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புகளை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுக்கப்பட்டது.

அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாகக் கொடுக்கப்படுகிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கொண்டேன்.அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த திரு. அருண் ஜெட்லி அவர்கள் பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள்.

அது என்ன ஆனது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?