கர்நாடக மாநிலம் எடியூர் அருகே ரயில் மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

238
Advertisement

கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து, மங்களூர் வழியாக கேரளா மாநிலம் நோக்கி, கண்ணூர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் எடியூர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மின்கம்பி அறுந்து, ரயில் பெட்டிகள் மீது விழுந்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின்கம்பிகள் சரி செய்யப்பட்டு, விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த வழிதடத்தில் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.