சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…

122
Advertisement

சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

சூடான் தலைநகர் கார்தூம் நகரை ஒட்டிய பகுதிகளை அணுகுவது மிகவும் கடினமாக உள்ளது என்றும் பேருந்துகளுக்கான டீசல் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது எனவும் கூறினார். ஜெட்டாவில் சுமார் 500 பேரும், சூடான் துறைமுகத்தில் 320 பேரும் நாடு திரும்ப காத்திருக்கின்றனர் என அவர் தகவல் தெரிவித்தார்.