சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

117
Advertisement

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது ராகுல் காந்தி இந்த கோரிக்கையை எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்ததாகவும், அவரை பின்பற்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் மண்டல் கமிஷன் அறிக்கையை கிடப்பில் போட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் அரசுகள் எந்த முடிவும் எடுக்காதபோது, தற்போது ராகுல் காந்தி அரசியல் நோக்கில் பாசாங்கு செய்வதாக பாஜக தலைவர்கள் சாடியுள்ளனர்.