முதலிடம் பிடித்த தமிழ்நாடு

187

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தை குஜராத்தும் 3ஆவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது.

சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதல் இடத்தையும் மணிப்பூர் இரண்டாவது இடத்தையும் சிக்கிம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர், டெல்லி, சண்டீகர் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

வெற்றி பெற்ற மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா பாராட்டி உள்ளார்.