இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து, முழுமையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10ஆம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரையும் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கு வரும் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு வரும் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.