கர்நாடக காங்கிரஸ் வெற்றிக்கு சிக்சர்களை தெறிக்க விட்ட தமிழக IAS! யார் இந்த சசிகாந்த் செந்தில்?

143
Advertisement

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் வெற்றிக்கு களத்தில் இறங்கி ஒரு கூட்டம் போராடி இருந்தாலும், சமூகவலைதளத்திலும் தொடர்ச்சியான பல முன்னெடுப்புகளை எடுத்ததும் இளைய தலைமுறையினரின் ஓட்டுக்களை பெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

224 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சசிகாந்த் செந்திலின் பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில், 2009ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார்.

இதையடுத்து, சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். ஆளுங்கட்சியான பாஜகவின் அழுத்தங்களை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாஜகவை ஆக்கப்பூர்வமாக எதிர்த்து வந்தார். நவீன ஆன்லைன் பிரச்சாரம், social media trending, வேட்பாளர்களின் image செட் செய்வது போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டார். அண்ணாமலை தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவினர் தோல்வியை தழுவியுள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் வெற்றிக்கு தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் காரணமாக அமைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.