தந்தை கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள்

180

தாம்பரம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த சிறுமி மீது சரக்கு வாகனம் ஏறியதால், தந்தையின் கண்முன்னே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.

இவர், தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்க, தனது மகன் மற்றும் மகள் அவந்திகாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்றபோது, சிறுமி அவந்திகா தூக்க கலக்கத்தில் சாய்ந்துள்ளார்.

மகளை தாங்கிப்பிடிக்க தந்தை கிருஷ்ணன் முயன்றபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் மூன்று பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் அவந்திகாவின் மீது தலைமீது ஏறியதால், அவள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரக்கு வாகனம் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.