Tuesday, April 23, 2024
Home Tags Politics

Tag: politics

மீண்டும் மீண்டும் மோடியா? தமிழகத்திலும் தாமரையா? அதிர்ச்சி கருத்து கணிப்பு

0
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துட்டிருக்க சூழல்ல, அடுத்து எந்த கட்சி பெரும்பான்மை இடங்களை ஜெயிக்க போது? யார் பிரதமரா ஆகப் போறாரு? இப்படி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வலம் வந்துட்டு இருக்க நிலையில...

கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?

0
இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க...

நிறம் மாறும் நிதிஷ் குமாருக்கு  இப்படியொரு ‘அலர்ஜி’!

0
10 ஆண்டுகள்ல அஞ்சு முறை கூட்டணி மாற்றம், 9 முறை CM பதவின்னு பிசியான அரசியல்வாதியா இருக்குற நிதிஷ் குமார், 35 ஆண்டுகளா MLA மட்டும் ஆகல. அதெப்படிப்பா MLA ஆகாம CM ஆக முடியும்னு தானே கேக்குறீங்க? அதைப் பத்திதான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம். 2020ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பாஜக கூட சேர்ந்து நிதிஷ் குமாரோட JDU எதிர்கொண்டுச்சு. 122 தொகுதிகள்ல வெற்றி பெற்றா ஆட்சியை புடிக்கலாம் அப்படின்ற நிலையில, பாஜக 74 தொகுதிகள்லயும் JDU 43 தொகுதிகள்லையும் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் CM ஆனாரு. அதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டுல பாஜகவை விட்டு வெளியேறின நிதிஷ் RJD மற்றும் காங்கிரஸ் கூட கூட்டணி வச்சு மறுபடியும் CM பதவியை புடிச்சாரு. இப்ப  இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக ஆதரவு MLAக்களோட மீண்டும் ஒரு முறை CM ஆகி இருக்காரு. இப்படி கிடைக்குற chanceல லாம் புகுந்து விளையாடுற நிதிஷ் குமாருக்கு MLA பதவின்னா மட்டும் கொஞ்சம் அலர்ஜிங்க. காரணம், அது மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய பதவி. இப்படி மூச்சுக்கு முன்னூறு முறை கூட்டணியை மாத்துனா மக்களை நம்பி தொகுதிகளை எப்படி வெற்றி பெற முடியும்? 2005ஆம் ஆண்டுல இருந்து தற்போது வரைக்கும் பீகார் முதல்வரா நிதிஷ் குமார் இருந்துட்டு வராரு. அதுக்கு முக்கியமான காரணம், அங்க இருக்க சட்ட மேலவை தான். தமிழ்நாட்டுல முன்னொரு காலத்துல சட்ட மேலவை இருந்தாலும், இப்ப நடைமுறைல இல்ல. ஆனா கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்ல சட்டசபை மட்டுமில்லாம சட்ட மேலவையும் செயல்பட்டு வருது. சட்ட மேலவை உறுப்பினர் பதவி வகிக்க MLAக்களோட ஆதரவு இருந்தா போதும். அந்தவகையில் தான் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினரா இருந்து முதலமைச்சர் பதவியை தக்க வச்சுட்டு வராரு. 1977ஆம் ஆண்டு ஹரனாட் சட்டசபை தொகுதியில நின்னு தோல்வியடைஞ்ச பிறகு, 1985ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்ல போட்டியிட்டு முதல் முறையா மட்டுமில்ல கடைசி முறையாவும் MLA ஆனாரு நிதிஷ் குமார். அதுக்கப்புறம் 35 ஆண்டுகளா MLAவா போட்டியிடாமலே முதல்வர் பதவியை கைவசம் வச்சுருக்கறது, நிதிஷ் குமாரோட ராஜதந்திரமா பாக்கப்பட்டாலுமே தோல்விக்கு பயந்து, MLAகளை மட்டுமே அரசியல் சதுரங்கத்துல காய்நகர்த்தி பதவியை தக்க வைக்குறது ஒரு வகையான கோழைத்தனம் அப்படின்றதே அரசியல் விமர்சகர்களோட பரவலான கருத்தா இருக்கு.

ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

0
ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலானபேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?

0
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...

மாநாட்டிற்கு பிறகு அதிரடியாக மாறும் திமுக! உதயநிதியின் வேற லெவல் வியூகம்

0
மழை, வெள்ளப் பேரிடர் கால விமர்சனங்கள், பொங்கல் பரிசு சர்ச்சைகள் என அனைத்தையும் தாண்டி, ஒரு பக்கம் கேலோ இந்தியா போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், முழு வீச்சில் தேர்தல் களத்தில் வேகம் எடுத்துள்ளது...

2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை..!

0
வருமான வரித்துறை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது,

சோழர்களின் செங்கோல் பாஜகவின் கையில்.. அரசியல் ஆரம்பம்.. எடுபடுமா தேசிய அரசியல்.!

0
அதுவும் திறப்பு விழா என்பது நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Recent News