சோழர்களின் செங்கோல் பாஜகவின் கையில்.. அரசியல் ஆரம்பம்.. எடுபடுமா தேசிய அரசியல்.!

106
Advertisement

பழங்குடியினர் என்பதால் நாடாளுமன்றத்தின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பதை அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும்,

அதுவும் திறப்பு விழா என்பது நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவிலும் அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்கட்சிகளில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து சோழர்களை திமுகவின் தமிழ்நாடு அரசு பெருமைபடுத்த தவறிய நிலையில், பாஜக சோழர்களை பெருமைபடுத்தியதாக பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் சமர் செய்து வருகின்றனர். இந்த செங்கோல் ஆனது பல்வேறு வரலாறுகளைக் கொண்டது. இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையிலான குறியீடைக் கொண்டதாக இருக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் மவுண்ட் பேட்டன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு ஆகியோர் விவாதித்தனர்.

இந்த சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜாஜி, வழமையான மரபுப்படி ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளலாம் என ஐடியா கூறினார். தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மூவேந்தர்களும் ஆட்சியை கைப்பற்றினால் செங்கோல் ஏந்தி ஆட்சி அமைப்பாளர் என்ற குறியீட்டை ராஜாஜி கூற அதை நேரில் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி மன்னர் காலத்து செங்கோல் அமைப்பிலான புதிய செங்கோல் திருவாடுதுறை ஆதின மடத்தின் உதவியால் தனியார் நகை நிறுவனத்தில் செங்கோலை ஆளுநர் மவுண்ட் பேட்டன் பெற்று நேருவிடன் வழங்கி ஆட்சி மாற்றத்தை அறிவித்தார். மேலும் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளது குறிப்பிடதக்கது.