2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை..!

111
Advertisement

ஐடி ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம்கூட நான் வாங்கலை என்று கூறியுள்ளார்.

வருமான வரித்துறை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, இன்று காலை தொடங்கி வருமான வரி சோதனை எனது சகோதரர் இல்லம், உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடை உறவினர்கள் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சில தொலைக்காட்சிகளும். பத்திரிக்கையினுடைய சமூக வலைதளங்களிலும் கூறப்பட்டது போல எனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

இந்த ஐடி ரெய்டு குறித்து மிக தெளிவான விளக்கங்களை திமுக கழக செயலாளர் ஆர்எஸ் பாரதி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அளித்துள்ளார். எனவே அவருக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத செயல்கள் குறித்தும், எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும் அண்ணன் ஆர்எஸ் பாரதி அவர்கள் மிகத்தெளிவாக விளக்கம் அளித்திருந்தார். எனவே இந்த சோதனை என்பது நாம் புதிதாக எதிர்கொள்வது அல்ல. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி பிரச்சாரத்திற்கு முன்பாக சோதனைகளை வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டோம்.

வாக்குப்பதிவுக்கு செல்லவிடாமல் சோதனை என்ற பெயரில் செய்தார்கள். பிரச்சாரம் செய்ய போகிறோம்.. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, எடுங்கள். முடிந்தால் வீட்டிற்கு சில் வைப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டில் பெற்றோர் முன்பு எந்த சோதனையில் பொருட்களை கைப்பற்றினீர்கள் என்பதை கையொப்பம் இட்டு தெரியப்படுத்துங்கள்.தேர்தல் முடிந்த பின் அதற்கான விளக்கங்களை தெரிவியுங்கள். சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றது. இப்போது நடைபெறுகிறது.

நான் 1996 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒன்றியக்குழு உறுப்பினராக சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். அன்று தொடங்கி இன்று வரை 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. குறிப்பாக கடந்த 26 ஆண்டுகளாக கரூர் மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எனக்கு தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரவக்குறிச்சியில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை வழங்கி, அதன் தொடர்ச்சியாக கரூரில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகளை வழங்கி, வெற்றி பெறச் செய்து, அதன்பிறகு அமைச்சரவையில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.