முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார் !

315
Advertisement

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோயால் இன்று காலமானார்.

ரெய்னாவின் தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். இந்திய ராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுணராக பணிபுரிந்துள்ளார். ஜம்மு காஷ்மீரை பூர்விகமாக கொண்ட ரெய்னாவின் குடும்பத்தார், அங்கு 1999ம் ஆண்டு நடந்த மோசமான தாக்குதல் காரணமாக உத்திரப்பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா இன்று காலை (06-02-2022) காலமானார். புற்று நோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்தில் உள்ள சொந்த வீட்டில் இன்று இயற்கை எய்தினார்.