ஞாயிற்றுக்கிழமையில் கட்டுப்பாடு..! காவல்துறை பயங்கர எச்சரிக்கை!

160
Advertisement

தமிழ்நாட்டில் RSS ஊர்வலம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட 45 இடங்களில் நாளை RSS அமைப்பினர் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்னர்.

இதற்கு அனுமதி அளித்துள்ள காவல் துறை,  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊர்வலத்தில் பங்ககேற்பவர்கள் தனி நபர்களை குறிப்பிட்டோ, சாதி, மதம் பற்றி எந்த காரணம் கொண்டும் தவறாக பேசக்கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் தான்  பொறுப்பு என்று உறுதி மொழி அளிக்க  வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதற்கான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைக்கு அனுப்பியுள்ளா