ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம்

253

கிரிமீயா பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவை கிரிமீயாவுடன் இணைக்கும் 19 கிலோமீட்டர் நீள கெர்ச் பாலத்தில், ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எரிபொருள் டேங்கர் சரக்கு ரயில் வெடித்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பாலம் பெரும் சேதமடைந்தது.

இந்த நிலையில், கிரிமீயா பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பயங்கரவாத செயல் என குற்றம்சாட்டிய அவர், உக்ரைனின் உளவுப்படைகள் ரஷ்யாவின் சிவில் உள்கட்டமைப்பில் முக்கியமான பகுதியை அழிப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்