போரை உடனே நிறுத்துங்கள் ரஷ்யாவுக்கு அதிரடி உத்தரவு ! வெற்றி முகத்தில் உக்ரைன்

283
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யா போர் , ஒவ்வொரு நாளும் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கத்தில் கொடூர தாக்குதல் என்பது ரஷ்யாவின் யுக்தியாகி இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர்  இன்று 22-வது நாளை எட்டி உள்ளது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும்  ரஷ்யா படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்தநிலையில், உக்ரைனில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு  ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளோம் என்றும்  சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும் எனவும்  உத்தரவை புறக்கணித்தால்  ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.