நாசா வெளியிட்ட கண்கொள்ளா காட்சி

274

பூமியில் இருந்து விண்ணில் 7ஆயிரத்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய “Bubble Nebula” புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பபுள் நெபுலாவை நாசாவின் Hubble தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி Hubble தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தியது.

இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. தற்போது, பூமியில் இருந்து 7ஆயிரத்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை நாசாவின் Hubble  தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பி உள்ளது. விண்மீன் கூட்டத்துக்குள் உள்ள அந்த பபுள் நெபுலா கண்கவரும் வகையில் வண்ணமயமாக உள்ளது. இந்த நெபுலா இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் சூப்பர் நோவா-வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.