Thor ஸ்பெஷல் எடிஷன் ரியல்மீ போன்

273
Advertisement

கிறிஸ் ஹெம்ஸ்ஒர்த் (Chris Hemsworth), நடாலி போர்ட்மேன் (Natalie Portman) ஆகிய முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ள தோர் லவ் அண்ட் தண்டர் (Thor: Love and Thunder) என்ற மார்வெல் திரைப்படம், இந்தியாவில்  ஜூலை 7ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மார்வெலின் பிரம்மாண்ட காட்சிகளுக்கும், சூப்பர்ஹீரோ கதைக்களங்களுக்கும் இந்தியாவில் உள்ள பெரும் ரசிகர் கூட்டத்தை குறிவைத்து, ரியல்மீ (realme) போன்களை விற்பனை செய்யும் ஷென்ஸென் (Shenzen) நிறுவனம் மார்வெலுடன் இணைந்து, தோர் ஸ்பெஷல் எடிஷன் போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

12GB+256GB storage கொண்ட Realme GT Neo 3 என்ற இந்த போனின் விலை 42,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நிட்ரோ ப்ளூ (Nitro Blue) கலரில் வெளிவர உள்ள இந்த போன், ஜூலை 13ஆம் தேதியில் இருந்து  ரியல்மீ இணையதளம், flipkart மற்றும் மொபைல் ஷோரூம்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.