சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை!

401
Advertisement

மேற்குஇந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினர்.

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

ஹாமில்டனில் நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீசுடன் விளையாடியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார்.

அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுரும் சதமடித்து அசத்தினார்.