ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னை தியாகராய நகரில் மழைநீர் அதிகம் தேங்கியது. மேலும் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்பட 11 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பார் என்றும், 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.