சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் பயிர்க்கடனுக்கு ரூ 4,130 கோடி

174
Advertisement

அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள். இதற்காக ரூ 15 கோடி ஒதுக்கீடு.

புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ 13,000 கோடி.

அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ 250 கோடி.

Advertisement

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ 36, 895 கோடியே 89 லட்சம்.

சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் பயிர்க்கடனுக்கு ரூ 4,130 கோடி.

முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ 4,816 கோடி.

விழுப்புரம், ராமநாதபுரத்தில் தொல்பொருள்களை வைக்க ரூ 10 கோடியில் அருங்காட்சியகம்.

சென்னை அருகே ரூ 300 கோடியில் தாவரவியல் பூங்கா.