மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

219

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்.

மேலும் தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சேலம்:

சேலத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், நல்லொழுக்க பாடம், புத்தாக்க பயிற்சி ஒரு வாரம் நடத்தப்படுவது உற்சாகமாக உள்ளது என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் கோடை விடுமுறையொட்டி பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசியர்கள் இனிப்புகள் வழங்கியும், பூ கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணாக்கர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை:

நாகை மாவட்டத்தில் இன்று 691 பள்ளிகல் திறக்கப்பட்டன.

நாகூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை, அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

மாணாக்கர்கள் அனைவரும் தினமும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கோடை விடுமுறைக்கு பின் நண்பர்களை சந்தித்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்:

பள்ளிகள் திறந்ததையொட்டி திண்டுக்கல்லில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாக்லேட், ரோஜா பூ, பேனா, பென்சில் அடங்கிய தொகுப்பை வழங்கி உற்சாகமுடன் வரவேற்றனர்.

இதனிடையே பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் வழங்கியும், பாரம்பரிய இனிப்புகளை வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.

திருவாரூர்:

திருவாரூரில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மலர், இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

இந்த செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை:

கோவையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணாக்கர்கள் தங்களின் நண்பர்களையும், ஆசிரியர்களையும் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.