அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி

242

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் புதர்மண்டி காட்சியளிப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை மற்றும் அதனை சுற்றி காடு போல புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.

Advertisement

கழிப்பறைகளும் சுத்தமின்றி காணப்படுகிறது.

பராமரிப்பு இன்றி இவ்வாறு இருப்பதால் விஷப்பூச்சிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதனால் அச்சத்துடன் பள்ளி செல்ல மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலை நீடித்தால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் ஆபத்தும் உள்ளது என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே  அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.