“சசிகலாவுக்கு அதிமுக-வில் எப்போதும் இடமில்லை”

161

சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் கையெழுத்திட்டு விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அமமுக-வில் இப்போது, நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்று கூறினார்.

மற்றவர்கள் அனைவரும் அதிமுக- வில் இணைந்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு அதிமுக-வில் எப்போதும் இடமில்லை என்றும் மற்றொரு கேள்விக்கு ஜெயக்குமார் திட்டவட்டமாக பதில் அளித்தார்.

பாஜக-வில் சசிகலாவை சேர்த்தால் அந்த கட்சி படுகுழியில் விழும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

திமுக-வினருக்கு மட்டுமே அரசு டெண்டர்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.