சசிகலா பாஜகவில் சேர அழைப்பு

240

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாக இல்ல திருமணவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று கூறினார்.

அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர் பாஜகவில் இணையவேண்டும் என்றும் அவரை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சசிகலா இணைந்தால் அது பாஜக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன் அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.