சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் பெரியசாமி.
அவரின் மகள் மற்றும் அவரின் தம்பியின் மகள் ஆகிய இருவரும் கிராமத்தின் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.