கச்சா எண்ணெய் அனுப்பும் வழியை மாற்றிய ரஷ்யா

317

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக குழாய் மூலம் அனுப்ப செர்பியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக செர்பியாவுக்கு குழாய்கள் மூலமாக அனுப்ப இருநாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன. வழக்கமாக குரேஷியா வழியாக குழாய் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹங்கேரி வழியாக குழாய் மூலம் அனுப்ப செர்பியா ஒப்புதல் அளித்துள்ளது.

குரேஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதன் காரணமாக, எரிபொருள் கொண்டு செல்ல முடியாததால், செர்பியா உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது. முன்னதாக ரஷ்யா மீதான பொருளாதார தடையால் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஹங்கேரி எதிர்ப்பை தெரிவித்திருந்தது.