நாளை தேர்தால் முடிவு கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் தாமரை? பாஜகவால் பீதியில் உறைந்த காங்கிரஸ்…!

190
Advertisement

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ரிசல்ட் நாளை வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தொங்குசட்டசபை அமைந்தால் பாஜகவினர் ‛ஆபரேஷன் தாமரை’ மூலம் எம்எல்ஏக்களை இழுத்து விடுவார்களோ என காங்கிரஸ் கட்சி பயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாஜகவிடம் இருந்து எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி முக்கிய திட்டம் வகுத்துள்ள விபரம் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. நாளை காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. நாளை மதியத்துக்கு மேல் கர்நாடகாவில் ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற விபரம் தெரிந்துவிடும்.

இதனால் நாளை தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை எப்படி பாதுகாப்பது? தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது எப்படி? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்பட மூத்த தலைவர்கள் இதுபற்றி தீவிரமாக ஆலோசித்துள்ளனர். இன்று இரவும் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.