கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்….!

86
Advertisement

ராஜ்ஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார் மாநில முதல்வர் அசோக் கெலாட்.

200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த்த ல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த 5 ஆண்டுகளாக மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுடன் மல்லுக்கட்டியே ஆட்சியை நகர்த்திக் கொண்டிருக்கிறார். சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போதும் டெல்லி மேலிடத்தின் ஆதரவுடன் அசோக் கெலாட் நிலைமைகளை சமாளித்தார்.